கல்லூரி எங்கள் 2வது வீடு; இங்கு புகைபிடிப்பது, மது அருந்துவது எங்கள் உரிமை - மாணவியின் அடாவடி பேச்சு!
கல்லூரி மாணவி ஒருவரின் சர்ச்சை பேச்சு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
மாணவன் உயிரிழப்பு
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஜாதவிப்பூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பல்கலைக் கழகத்தில் சில நாட்களுக்கு முன் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மிகவும் மோசமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் கண்டங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
மாணவி பேச்சு
அந்த மாணவி பேசியதாவது 'பல்கலைக் கழகம் எங்களுக்கு 2 ஆவது வீட்டைப் போன்றது. அதன் அடிப்படையில் இந்த வளாகத்தில் எங்களுக்கு புகை பிடிக்கவும், மது குடிக்கவும் உரிமை உண்டு.
இதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. இது எங்களுடைய உரிமை' என்று அந்த மாணவி பேசியுள்ளார். அந்த மாணவியின் பேச்சை நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.