மொபைல் போன் பயன்படுத்திய மகனை கண்டித்த தாய்- மகன் எடுத்த வீபரித முடிவு!

Madurai Crime Death
By Vidhya Senthil Nov 04, 2024 05:01 AM GMT
Report

  செல்போன் பயன்படுத்துவதைத் தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை 

மதுரை மாவட்டம் விரகனூர் மகாராஜா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய சுந்தர். இவரது மகன் நித்தியானந்தம் (19 வயது). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் 2- ம் ஆண்டு படித்து வந்தார்.

மொபைல் போன் பயன்படுத்திய மகனை கண்டித்த தாய்- மகன் எடுத்த வீபரித முடிவு! | College Student Commits Suicide

நித்தியானந்தம் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் நித்தியானந்தத்தை தாய் கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

வீட்டு வேலை பார்த்த 16 வயது சிறுமி; அடித்தே கொன்ற பெண் - பகீர் பின்னணி!

வீட்டு வேலை பார்த்த 16 வயது சிறுமி; அடித்தே கொன்ற பெண் - பகீர் பின்னணி!

அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் நித்தியானந்தத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர் . அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

தற்கொலை

இது குறித்து அவரது தந்தை விஜய சுந்தர் போலீசில் புகார் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மொபைல் போன் பயன்படுத்திய மகனை கண்டித்த தாய்- மகன் எடுத்த வீபரித முடிவு! | College Student Commits Suicide

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.