குளத்தில் மிதந்த சிறுமியின் உடல் - கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்
காணாமல் போன சிறுமி குளத்தில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
கிராம மக்கள் போராட்டம்
மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தார் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காவல் நிலையம் ஒன்றிற்கு பலகட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரை மரத்தில் கட்டி வைத்து தாக்குவதாக தகவல் வந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், காவல் துறையினரை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
காணாமல் போன சிறுமி
இதனையடுத்து கூடுதலாக காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களால் தாக்கப்பட்ட அந்த நபர் அதற்குள் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பலகட்டா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி காணாமல் போயுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கிராமம் முழுக்க தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், மோனா ராய் என்ற நபருடன் சிறுமியை கடைசியாக பார்த்ததாக, சிலர் கூற அவரின் வீட்டில் நுழைந்து சோதனையிட்டனர்.
குளத்தில் மிதந்த உடல்
அவரின் வீட்டு படுக்கையில் ரத்தக்கறை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சிறுமியின் உடல் கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது. மோனா ராய் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக அவரை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
சிறுமி மற்றும் மோனா ராயின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் தன்னையும் அடித்து கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் பக்தா ராய் என்ற நபர் சிறுமி கொலையில் தனக்கும் தொடர்பு இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார்