வீட்டு வேலை பார்த்த 16 வயது சிறுமி; அடித்தே கொன்ற பெண் - பகீர் பின்னணி!
16 வயது வீட்டுப் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
பணிப்பெண் கொலை
சென்னை, சதாசிவம் தெருவில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.இங்கு வசித்து வருபவர் முகமது நவாஸ். இவரது மனைவி பெயர் நபியா. இவர்கள் வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
தீபாவளி தினத்தன்று சிறுமி, வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வராததால் முகமது நவாஸ்-நாசியா தம்பதி, கதவை உடைத்து பார்த்தபோது சடலமாக கிடந்துள்ளார். உடனே, இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
பின், மறுநாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதில், சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
6 பேர் கைது
இதுபற்றி வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரித்தபோது, சிறுமிக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை. அவரது தாயார் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. தீபாவளி தினத்தன்று வீட்டில் சரியாக வேலை செய்யவில்லை என முகமது நவாஸ்,
அவரது மனைவி நாசியா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை குளித்துவிட்டு வரும்படி கூறியதாகவும், அதற்காக குளியலறைக்கு சென்ற சிறுமி அங்கேயே மயங்கி விழுந்து இறந்து போனது தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமி இறந்து ஒரு நாள் ஆகிவிட்டதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. அதனை மறைக்க வீடு முழுவதும் வாசனை திரவியங்களை தெளித்துள்ளனர். இதனையடுத்து தற்போது, போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நவாஸ்,
அவரது மனைவி நாசியா மற்றும் அவரது நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, சீமா, மகேஸ்வரி ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.