ரயிலின் இன்ஜினில் சிக்கிய தலைமுடி.. கடைசியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
ரயிலின் என்ஜினில் தலைமுடி சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்
திருவனந்தபுரத்திலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் , இன்று காலை புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையம் வந்தது.

அப்போது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் இளம்பெண் ஒருவரின் தலைமுடி சிக்கிய நிலையில் அமர்ந்துள்ளதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது அந்த இளம்பெண் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ரயில் என்ஜின்
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கும், பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே திருவனந்தபுரம் விரைவு ரயில் வந்தபோது அதில் சிக்கி இழுத்து வரப்பட்டு, உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அல்லது இவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போதும் இந்த விபத்து நடந்ததா? எவ்வாறு அவர் ரயில் என்ஜின் முகப்பில் சிக்கினார்? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து, தற்போது காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil