பொட்டுக்கடலை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த கொடூரம்!
பொட்டுக்கடலை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம் நர்சேனா காவல் எல்லைக்கு உட்பட்ட முகமதுபூர் பர்வாலா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது . பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நவம்பர் 24 அன்று மாலை சந்தை விற்பனையாளரிடம் இருந்து வறுத்த பொட்டுக்கடலையை வாங்கியுள்ளனர்.
அன்று இரவு அவர்கள் வீட்டில் இரவு உணவில் சேர்த்துச் சாப்பிட்டுள்ளனர்.இதனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர்கள் இரத்த வாந்தி எடுத்து அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.
உயிரிழந்த சம்பவம்
ஆனால் தாத்தா கலுவா சிங் (50) மற்றும் அவரது இளம் பேரன் கோலு (8) மருமகள் ஜோகேந்திரி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்துவந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .
அப்போது பிரேதப் பரிசோதனை செய்யாமல், இறந்தவர்களின் உடலை உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த நிலையில் இன்று இறந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.