20 வருஷ கனவு; கோவை புறவழி சாலை திட்டம் - ஒருவழியாக முடிவுக்கு வந்தாச்சு..
கோவையில் மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் முதல் கட்டப் பணி முடியவுள்ளது.
எல் அண்ட் டி சாலை
கோவையை சுற்றிலும் மேற்கு புறவழிச்சாலை மற்றும் கிழக்கு புறவழிச்சாலை ஆகிய இரண்டு சாலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சுமார் 20 ஆண்டு காலமாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, மதுக்கரை முதல் மாதம்பட்டி வரையிலான 11.8 கிலோ மீட்டர் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 200 கோடியில் நடைபாதையுடன் இந்த சாலை அமைக்கப்பட்டு வந்தது. இரண்டாம் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிக்காக, நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன.
வரைவு திட்டம்
மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சார்பாக கோவையில் உள்ள முக்கியமான எல் அண்ட் டி சாலை அகலப்படுத்தப்படவுள்ளது. தொப்பூர் கணவாய்க்கு அடுத்தபடியாக இந்த சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
எனவே, இதனை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என பலத்த கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு இதற்கான வரைவு திட்டத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.