சிங்கிளா வந்தால் ஜோடி ரெடி; டேட்டிங் பார்ட்டி - பறந்த விளம்பரம் - ஆர்வத்தில் இளைஞர்கள்!
டேட்டிங் குறித்த விளம்பரம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
டேட்டிங் விளம்பரம்
கோவை, சரவணம்பட்டியில் பிரபலமான கஃபே ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டீ, காபி, கேக், ஜூஸ் போன்ற ஸ்னாக்ஸ் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. இது ரெசார்ட் அமைப்பில் அமைந்துள்ளது.
தற்போது புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருவதால் அங்கு டேட்டிங் பார்ட்டி நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விளம்ப்ரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஜாலியாக டான்ஸ் ஆடி, டீ, காபி குடிக்கலாம்.
போலீஸார் விசாரணை
உங்களுடன் இளம்பெண்கள் டான்ஸ் ஆடுவார்கள், சிங்களா வந்தால் அந்த பெண்களுடன் ஜோடி சேரலாம். உங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு இன்ஸ்டாவில் பெரும் வைரலாகியுள்ளது. அதன்பின், சரவணம்பட்டி, கோவில்பாளையம், சின்னவேடம்பட்டி என பல்வேறு பகுதி இளைஞர்கள் இதுகுறித்து விசாரித்து வந்துள்ளனர்.
அந்த சமயத்தில் இதுகுறித்து அறிந்த போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில், நியூ இயர் ஜாலிக்காக இப்படி புரோகிராம் ஏற்பாடு செய்தோம், இதற்கு முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம் என கஃபே தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்களை டான்ஸ் ஆடவைப்பது தவறு என எச்சரித்துள்ளனர். அதனையடுத்து இந்த டேட்டிங் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.