நடிகை, 105 வயது பாட்டி, டீச்சர் என ஒருவரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர் - குவியும் பாராட்டு
365 பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்ற இலக்கோடு பிரபல நடிகர் சுந்தர் ராமு செயல்பட்டு வருவது பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் 3, மயக்கம் என்ன, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சுந்தர் ராமுவின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது சோகக்கதை. ஆனால் தான் இன்னும் காதலை வெறுக்கவில்லை என செம கூலாக அவர் கூறியுள்ளார்.
பிரபல ஊடகத்திற்கு தனது டேட்டிங்கின் நோக்கம் குறித்து விரிவாக பேசியுள்ள சுந்தர் ராமு, இந்தியாவில் பெண்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தான் இந்த முயற்சி என தெரிவித்துள்ளார். அவரின் பேஸ்புக் பக்கத்தில் டேட்டிங் சென்ற குட்டிக்கதைகள் நிறைந்து கிடைக்கின்றன.
டேட்டிங் தொடர்பாக பேஸ்புக்கில் முதலில் போஸ்ட் பதிவிட முதல் 10 டேட்டிங் அவருக்கு தெரிந்தவர்கள் நெருக்கமானவர்களுடன் தான் இருந்துள்ளது. நாளடைவில் இது பிரபலமடைய நிறைய டேட்டிங் ஆஃபர்கள் வந்துள்ளது. நடிகை ஸ்ரேயா, 105 வயது பாட்டி, குப்பை சேகரிக்கும் பெண், பழங்களை விற்கும் பெண்மணி, 90 வயதான அயர்லாந்து நாட்டின் கன்னியாஸ்திரி, விளம்பர மாடல்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என இவரின் டேட்டிங் லிஸ்ட் பெரிது.
டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் டேட்டிங் ஐடியாவுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தப் பிரச்னைக்கு ஆண்கள் ஒரு தீர்வாக இருக்க வேண்டும். டேட்டிங் போது நிறைய தவறான புரிதல்கள் உள்ளன. பெண்கள் என்பவர்கள் அழகான கால்களும், வளைவுகளையும் மட்டும் கொண்டவர்கள் அல்ல. ஒவ்வொரு பெண்களும் மற்ற பெண்களில் இருந்து வேறுபடுகிறார்கள் என சுந்தர் ராமு தெரிவித்துள்ளார்.
மேலும் நீங்கள் ஒரு ஆண் என்றால் மற்ற பாலினத்தின் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். அப்போதுதான் அவர்களின் பிரச்னைகளை நீங்கள் இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள முடியும். ஆணாதிக்கம் ஆழமாக வேரூன்றிய ஒரு நாட்டையும் சமூகத்தையும் ஒரே இரவில் மாற்ற முடியும் என நினைத்தால் அது கேலிக்குறியது. ஆனால் ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த தலைமுறையில் இல்லையென்றால் அடுத்த தலைமுறைகளில் தீர்வு கிடைக்கட்டும் என சுந்தர் ராமு கூறியுள்ளார்.
365 டேட்டிங்கில் இதுவரை 335 பெண்களுடன் டேட்டிங் சென்றுள்ளார். கூடிய விரைவில் தனது இலக்கினை அடைவேன் எனவும் சுந்தர் ராமு தெரிவித்தார். அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.