நீங்க ரொம்ப குண்டா இருக்கீங்களா? டயட்டே இல்லாமல் ஈசியா எடையை குறைக்கனுமா - இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க!
டயட்டே இல்லமால் ஈசியாக உடல் எடையை குறைக்கவேண்டுமா இதை ஃபாலோ பண்ணுங்க.
உடல் பருமன்
தற்பொழுது உடல் பருமன் பிரச்சனை தான் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு உணவுப்பழக்கமே 90 சதவீத காரணமாக உள்ளது. அந்த உணவுப்பழக்கத்தில், சில மாற்றங்களை கொண்டுவந்தாலே, உடல் எடை கட்டுக்குள் வரும். அதில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் எண்ணெய்.
நாம் சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உடல் எடை குறைய வேண்டுமானால், அதற்கு நிபுணர்கள் பெரும்பாலும் சொல்வது தேங்காய் எண்ணெய்தான். இந்த தேங்காய் எண்ணெய் கல்லீரல் மற்றும் குடலுக்கும் நன்மை பயக்கும். மேலும், காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேங்காய் எண்ணெயை சாப்பிடலாம். தினமும் காலையில் தேங்காய் எண்ணெய் குடித்தால் உடல் எடை குறையும் என்று கூறுகின்றனர்.
தேங்காய் எண்ணெய்
இதனை தொடர்ந்து, தேங்காய் எண்ணெய்யில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைய உள்ளதால், இது சமையலுக்கு ஏற்றது மட்டுமல்ல சரியானதும்கூட என்கிறார்கள். இதிலுள்ள லாரிக் அமிலமானது, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால், ஹார்ட் அட்டாக் உள்ளிட் இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகினறன.
அத்துடன் கொழுப்பையும் குறைத்துவிடுகிறது. இதிலுள்ள ட்ரைகிளிசிரைடுகள் விரைவாக உறிஞ்சப்படுவதால், கலோரி எரிப்பை அதிகப்படுத்துகிறது. மேலும், தேங்காய் எண்ணெய்யில் கலோரிகளும் அதிகம் உண்டு என்பதால், குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால் எடை அதிகமாகிவிடும்.
எந்த எண்ணெய்யை பயன்படுத்தினாலும், ஒரே பிராண்டு எண்ணெய்யை தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடாது. மாதமாதம் எண்ணெய்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். அதேபோல, உணவுமுறையில் ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமானால், நிச்சயமாக டாக்டர்களின் ஆலோசனையில்லாமல், பரிந்துரையில்லாமல், அறிவுரையுமில்லாமல் செய்யக்கூடாது.