கிடுகிடுவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ.. இதை ட்ரை பண்ணுங்க...

Weight Loss
By Nandhini Aug 12, 2022 07:30 AM GMT
Report

உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

உடல் பருமன்

இன்றைய காலத்தில் தன் உடல் தோற்றத்தின் மீது பலருக்கு அக்கறையே கிடையாது. கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கங்களால் உடை எடை அதிகரித்து காற்றடித்த பலூனை போல் மாறி விடுகின்றனர்.

உடல் எடை குறையவும், அதிகரிக்காமல் இருக்கவும் உண்ணும் உணவில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துவது அவசியமோ அதே போல உடல் உழைப்பிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவது என்பது மிகவும் முக்கியம்.

உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான பணிதான். இன்றைய மக்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால், அதற்கான பலன்தான் அவர்களுக்கு கிடைப்பது கிடையாது.

ஜிம்மில் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதிலிருந்து பட்டினி கிடப்பது மற்றும் ஃபாஸ்ட் டயட்களைப் பின்பற்றுவது வரை, நாம் உடல் நிலையில் இருக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, வடிவத்தில் இருப்பது உடல் மற்றும் மனதைப் பற்றியது மட்டுமல்ல, தன்னம்பிக்கையை அதிகரிப்பதும் ஆகும்.

weight loss

எப்படி உடல் எடையை கிடுகிடுவென குறைக்கலாம் என்று பார்ப்போம் -

சர்க்கரை குறைத்தல்

வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

தண்ணீர்

தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

எலுமிச்சை

உடல் எடையை குறைக்க உண்ணும் உணவிலும் எலுமிச்சையை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். டயட்டில் இருக்கும்போது, கொழுப்புக்களை சிட்ரஸ் பழங்களாலான பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிறும் நிறைந்திருக்கும்.

முருங்கை இலை

தினமும் காலையில் முருங்கை இலையை காய்ச்சி, அதில் தேனை சேர்த்து குடித்துவந்தால் உடல் எடை உடனடியாக எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் குறையும்.

சோம்பு

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சோம்பு கலந்த நீரை அருந்தி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சோம்பு நீரானது நீக்கி உடலை குறைக்க உதவி செய்யும்.