ஓய்ந்த பிரச்சாரம்; மெரினாவில் திடீர் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின் - உருக்கமான பதிவு!
முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
அதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள வடசென்னை, தென்சென்னை, மத்திய தென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டார்.
நினைவிடத்தில் மரியாதை
அதன்பின், நேரடியாக சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு உள்ள மறைந்த முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
ஆளாக்கிய தலைவரின் நினைவிடத்தில்.... pic.twitter.com/MZVbdVuj2v
— M.K.Stalin (@mkstalin) April 17, 2024
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
இதனையடுத்து இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, அதில், ‛‛ஆளாக்கிய தலைவரின் நினைவிடத்தில்'' என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.