ஒரே நாடு ஒரே தேர்தல்; கடுமையா எதிர்க்கனும் - முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்!

M K Stalin Tamil nadu
By Sumathi Feb 14, 2024 07:33 AM GMT
Report

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். மேலும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு முடிவைக் கைவிட வேண்டும் எனவும் மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

tn assembly

அப்போது பேசிய அவர், "நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

தனித்தீர்மானம்

இரண்டு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது.

முதல்வர் ஸ்டாலின்

அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து, ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால் அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ,

ஒரே நாடு ஒரே தேர்தல் .. திமுக பயப்படுகிறது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஒரே நாடு ஒரே தேர்தல் .. திமுக பயப்படுகிறது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட உள்ள நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் செயலுக்கு யாரும் பலியாகிவிட கூடாது. எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.