ஒரே நாடு ஒரே தேர்தல் .. திமுக பயப்படுகிறது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK D. Jayakumar
By Irumporai Jan 14, 2023 09:15 AM GMT
Report

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கொள்கையை பார்த்து திமுக அச்சப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

திமுகவுக்கு பயம் 

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு அளித்தது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கொள்கையை பார்த்து திமுக அச்சப்படுகிறது எனக் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் .. திமுக பயப்படுகிறது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Dmk Is Afraid Of The Policy Of Election Jayakumar

ஜெயக்குமார் விமர்சனம் 

மேலும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி இந்திய சட்ட ஆணையம் பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்டு இருந்தது.

இதற்கு பதில் அளிக்க ஜனவரி 16 கடைசி தேதியாகும் இந்த நிலையில், மக்கள் அனைவரும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிப்பார்கள் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.