மொழிக்கெல்லாம் இல்ல; இந்தி திணிப்புக்குதான் எதிர்ப்பு - யோகிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

M K Stalin Tamil nadu Yogi Adityanath
By Sumathi Mar 27, 2025 05:00 AM GMT
Report

இந்தி மொழி திணிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை 

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் வாக்கு வங்கிகளை குறிவைத்து அரசியல் செய்வதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழக அரசை விமர்சித்திருந்தார்.

yogi adityanath - mk stalin

இந்நிலையில் இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “இருமொழிக் கொள்கை, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான, வலுவான குரல் தேசிய அளவில் ஒலிப்பதால் பாஜக கலக்கமடைந்துள்ளது.

அதற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் - சேகர்பாபு உறுதி!

அதற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் - சேகர்பாபு உறுதி!

ஸ்டாலின் பதிலடி

அக்கட்சியின் தலைவர்கள் அளிகும் பேட்டியில் அது புலப்படுகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நமக்கு வெறுப்பு பற்றி பாடம் எடுக்கிறார். எங்களை விட்டுவிடுங்கள். அவர் வெறுப்பு பற்றி பாடமெடுப்பது நகை முரண்.

அரசியல் அவல நகைச்சுவையன்றி வேறு என்னவாக இருக்க முடியும். நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.