அதற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் - சேகர்பாபு உறுதி!
திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு
சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால்தான், கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்
கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு கூட்ட நெரிசல் காரணமல்ல, உடல்நலக்குறைவே காரணம். இனிவரும் காலங்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
திருச்செந்தூர் திருப்பதிக்கு இணையாக மாறும் திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பின் திருப்பதிக்கு இணையாக மாறும்.
தமிழகத்தில் 2 கோயில்களில் இருந்த அன்னதான திட்டத்தை 17 கோயில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்களுக்கு இறைபசியை மட்டும் அல்லாமல், வயிற்றுப் பசியும் போக்கும் அரசு திமுக அரசு” எனத் தெரிவித்துள்ளார்.