அரசு ஊழியர்களுக்கு தாமதமாக கிடைக்கும் சம்பளம் - அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Tamil nadu Government of Tamil Nadu
By Vidhya Senthil Mar 27, 2025 02:40 AM GMT
Report

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்துக்கான சம்பளம் ஏப்ரல் 2 ஆம் தேதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தாமதமாக கிடைக்கும் சம்பளம் - அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! | Tn Govt Announced Will Give March Month Salary

தமிழ்நாட்டில் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர். இது மட்டுமின்றி 7 லட்சத்து 05 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள், மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இருக்கின்றனர்.

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான மார்ச் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி கிடைக்காது.

மேலும் வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி விடுமுறை என்பதால் மார்ச் மாதத்துக்கான ஊதியம், ஓய்வூதியம் ஏப்ரல் 2 ஆம் தேதி வழங்கப்படும் மாநில அரசு தெரிவித்துள்ளது.