ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி; அந்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா.?

M K Stalin Rahul Gandhi Coimbatore Lok Sabha Election 2024
By Sumathi Apr 12, 2024 05:00 AM GMT
Report

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பை வெளியிடுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

பிரதமர் வேட்பாளர்?

ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

stalin - rahul gandhi

இதனையொட்டி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வருகிறார். திருநெல்வேலி பெல் மைதானத்தில் 4 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டதில் கலந்துகொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளரையும் ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

கூட்டணி கூட்டணி என்கிறீர்களே..யாரு பிரதமர் வேட்பாளர்..? இபிஎஸ் கேள்வி

கூட்டணி கூட்டணி என்கிறீர்களே..யாரு பிரதமர் வேட்பாளர்..? இபிஎஸ் கேள்வி

பொதுக் கூட்டம்

தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கோவை செல்கிறார். கோயம்புத்தூரில் இரவு 7 மணியளவில் செட்டிபாளையம் எல் அண்ட் டி பை - பாஸ் அருகில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார்.

ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி; அந்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா.? | Cm Stalin Rahul Gandhi Mp Campaign Tamilnadu

அங்கு இருவரும் கூட்டாக இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.இந்தியா கூட்டணியில் இப்போது பிரதமர் வேட்பாளர் இல்லை. எனவே, இந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் யார் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.