'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே பிரபல நாளிதழ் ஒன்றுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
பிரதமர் வேட்பாளர்
அப்போது அவரிடம் "யார் பிரதமர் என்று அறிவிக்காமல் 'இந்தியா' கூட்டணி மக்களவை தேர்தலை சந்திக்கிறது. அது பலவீனமாக தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "இப்போது நடைபெறுவது, யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட,
யார் பிரதமராக தொடரக் கூடாது என்பதற்கான தேர்தல். இது ஒரு ஜனநாயக மீட்புப் போராட்டம். இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போர். அந்தவகையில் 'இந்தியா' கூட்டணிதான், இந்தியாவின் பிரதமர் முகம்" என்று பதிலளித்துள்ளார்.