உதயநிதியை தண்டித்தே ஆகனும்; வாக்குப்பதிவு முடிஞ்சதும்.. பொங்கிய காங்கிரஸ் முதலமைச்சர்!

Udhayanidhi Stalin Nationalist Congress Party Telangana
By Sumathi Apr 20, 2024 06:59 AM GMT
Report

அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சனாதன பேச்சு

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

udhayanidhi stalin - revanth reddy

மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

தொடர்ந்து, இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஒரே வழக்காக மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சனாதன சர்ச்சை: என்ன தகுதி இருக்கு? மத வெறிதான் ; கஸ்தூரியை விளாசிய சத்யராஜ் மகள்!

சனாதன சர்ச்சை: என்ன தகுதி இருக்கு? மத வெறிதான் ; கஸ்தூரியை விளாசிய சத்யராஜ் மகள்!

ரேவந்த் ரெட்டி கண்டனம்

தற்போதுவரை, இவ்வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில்,

உதயநிதியை தண்டித்தே ஆகனும்; வாக்குப்பதிவு முடிஞ்சதும்.. பொங்கிய காங்கிரஸ் முதலமைச்சர்! | Cm Revanth Reddy About Udhayanidhi Sanathanam

“தெலங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்வர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்து தவறு என்று நான் கூறுகிறேன். அதற்கு நிச்சயம் அவர் பொறுப்பேற்க வேண்டும். அது அவருடைய சிந்தனையாக இருக்கலாம்.

ஆனால் சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய நாடு. ஆகவே, மத உணர்வுகளை மதித்து, அதற்கு தீங்குவிளைவிக்காமல் அனைவரின் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவதே முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார். I.N.D.I.A கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.