உதயநிதியின் சனாதன பேச்சு - நீதிமன்ற அவமதிப்பு இல்லை - உச்சநீதிமன்றம்!!
அமைச்சர் உதயநிதி சனாதன பேச்சு குறித்தான வழக்கில் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
சனாதன சர்ச்சை
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தற்போது வரை சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகின்றது.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
நீதிமன்ற அவமதிப்பு இல்லை
இதில், உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு சஞ்சீவ் கண்ணா மற்றும் சரசா வெங்கடநாராயண பாட்டி ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிக்கு, இது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருத முடியாது என்று கூறி, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்துள்ளனர்.