அவசர அவசரமாக ஆய்வு கூட்டம்.. ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - முதல்வர் எடுத்த முடிவு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கபட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் குடும்ப அட்டைக்கு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயல்
சென்னை தலைமைச் செயலகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் காணொலி வாயிலாகவும் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.
நிவாரணம்
அதுமட்டுமில்லாமல் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் மழை ,வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதனைஅடுத்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் காணொலி வாயிலாக தற்போதைய நிலையை முதல்வர் கேட்டறிந்தார்.