திருவண்ணாமலை மண்சரிவு... நெஞ்சை பதற வைக்கிறது - தவெக தலைவர் விஜய் வேதனை!

Vijay Tamil nadu Tiruvannamalai
By Swetha Dec 03, 2024 04:58 AM GMT
Report

திருவண்ணாமலை மண்சரிவு நெஞ்சைப் பதற வைக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் தனது கொள்கைகளை அறிவித்ததோடு கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளை அறிவித்தார். விஜய்யின் அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மண்சரிவு... நெஞ்சை பதற வைக்கிறது - தவெக தலைவர் விஜய் வேதனை! | Tvk Leader Vijays Sad Over Tiruvannamalai Incident

இந்த நிலையில் திருவண்ணாமலை மண்சரிவு தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில் தெரிவித்திருப்பது, திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி,

நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி,

மாவீரம் போற்றுதும் ; 2 வார்த்தையில் பதிவு - விஜய் சொல்ல வருவது என்ன?

மாவீரம் போற்றுதும் ; 2 வார்த்தையில் பதிவு - விஜய் சொல்ல வருவது என்ன?

மண்சரிவு

தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு,

திருவண்ணாமலை மண்சரிவு... நெஞ்சை பதற வைக்கிறது - தவெக தலைவர் விஜய் வேதனை! | Tvk Leader Vijays Sad Over Tiruvannamalai Incident

அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி,

மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும்,

ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.