பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை அடுத்த புழலில் உள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் பள்ளிகள் ஒரு மாத காலம் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ,மாணவிகள் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்காகத்தோடு பள்ளிகளுக்கு சென்றனர்.
பள்ளிகளுக்கு வந்த மாணவ,மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கியும்,பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.மாணவர்களுக்கு முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
முதலமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புழலில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியின் உள்ளே சென்ற அவர்,பள்ளியின் வகுப்பறை,சமையலறை,கழிவறை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
வகுப்பறைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் மாணவராக பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்தார். பின்னர் முதலமைச்சருடன் மாணவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கம் : முதலமைச்சர் ஸ்டாலின்