அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கம் : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin Tamil nadu DMK
By Irumporai Jun 13, 2022 06:06 AM GMT
Report

அனைவருக்கும் கல்வி என்பது திராவிட மாடலின் நோக்கமாக உள்ளதாக் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் தொடங்கியுள்ளது, இந்த நிலையில், அரசு பள்ளிகளில் 1 முத்த 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் :

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் எளிய முறையில் கல்வி கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கற்றலில் புதிய யுக்தி :

கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் நேரடியாக கல்வி கற்க முடியாத சூழல் இருந்தது ஆகவே கற்பிப்பததில் புதிய யுக்தி தேவை என்பதால் தான் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் 2025க்குள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம் எனக் கூறிய முதலமைச்சர் .

தொடக்க பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு எண்ணும் எழுத்தும் தோட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் . ஒவ்வொரு பாடத்திற்கும் தனி தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த திட்டத்தை செழுமைப்படுத்துவார்கள். கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைக்க இந்த திட்டம் உதவும் எனக் கூறினார்

அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கம்

அனைவருக்கும் கல்வி என்பது திராவிட மாடலின் நோக்கமாக உள்ளது தொடர்ந்து இந்த திட்டம் 3 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பயிற்சி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கம் : முதலமைச்சர் ஸ்டாலின் | Chief Minister Stalin Ennum Ezhuthum Scheme

எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வடிவங்களில் பயிற்சி அளிக்கும்படி இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர். கதை, ஆடல், பாடல் என பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக என்றார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை செயலாளர் காகர்லா உஷா, கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

"பிரதமருக்கு மேடையில் வகுப்பு எடுத்தவர் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்" - உதயநிதி ஸ்டாலின்