தமிழ்நாட்டின் 235-வது சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் 235-வது சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும்,திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்றுள்ளார்.
சமத்துவபுரம் திறப்பு
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
13 ஏக்கர் பரபரப்பளவில் ரூ.1.90 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துபுரத்தில் 100 வீடுகள்,நியாய விலைக்கடை,அங்கன்வாடி மையம்,பூங்கா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இன்று காலை இந்த சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடுகளின் சாவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி - தயாராகும் போக்குவரத்து துறை