இராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
திருப்பத்துார்,வேலுார் மாவட்டங்களை தொடர்ந்து இராணிப்பேட்டையில் முடிவடைந்த திட்ட பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்
ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
விழாவில் சுமார் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா..!