தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள்..வானமே எல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Suriya M K Stalin
By Thahir Jun 29, 2022 10:51 AM GMT
Report

ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விக்ரம் திரைப்பட வெற்றி 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் அண்மையில் நடிகர் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள்..வானமே எல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! | Chief Minister Mk Stalin Congratulates Surya

இதையடுத்து அவரின் ரோல் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.இந்த நிலையில் கமல் அவருக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார்.

முதலமைச்சர் வாழ்த்து 

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!’ என பதிவிட்டுள்ளார்.