அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்தார் நடிகர் விஜய்.
அதன்படி கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவில்லை.
மு.க.ஸ்டாலின் கருத்து
அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று விஜய் அறிவித்தார். மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்" என்று தெரிவித்துள்ளார்.