அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் - ரஜினி என்ன சொன்னாரு தெரியுமா..?
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்தார் நடிகர் விஜய்.

அதன்படி கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவில்லை. அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று விஜய் அறிவித்தார்.
ரஜினிகாந்த் வாழ்த்து
மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil