உளங்கவர் ஓவியமே.! உற்சாகக் காவியமே.. கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!

M K Stalin M Karunanidhi DMK
By Thahir Jul 09, 2022 12:30 AM GMT
Report

புதிதாக நிறுவப்பட்ட முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதி உருவச்சிலை திறப்பு

திருவண்ணாமலை - வேலுார் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Karunanidhi

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. மொத்தமாகவாயிலை 21 அடி உயரத்தில் கருணாநிதி சிலை பிரமாண்டமாக உள்ளது. 

Thiruvanamalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அண்ணா நுழைவு வாயிலையும், கருணாநிதியின் உருவ சிலையையும் திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

M K Stalin

அதில் பேசிய அவர், மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. அண்ணாவின் ஆசைகள் ,கலைஞரின் கனவுகளை நிறைவேற்றிய திருப்தி எனக்கு உள்ளது.என கூறினார்.


லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் காமராஜ்..!