முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து
இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் பிறந்தநாளை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இன்று காலையில், தன்னுடைய தந்தையும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக தொண்டர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம், இனிப்பு, கேக் ஆகியவற்றை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், முன்னாள் முதலமைச்சர் மு.க.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இன்று
— வைரமுத்து (@Vairamuthu) June 3, 2022
கலைஞர் 99ஆம் பிறந்தநாள்
கலைஞர் நினைவிடம்
கலைஞர் சிலை
கோபாலபுரம்
சி.ஐ.டி காலனியில்
அஞ்சலி செலுத்தி வந்தேன்
அனைத்து இடங்களிலும்
பழைய நினைவுகளில் பரவசமானேன்#HBDKalaignar99 #Kalaignar99 #கலைஞர்99 pic.twitter.com/xsSlbrhaZs