முதல் போட்டியிலேயே கண்ணீர் விட்ட ஜிம்பாப்வே கீப்பர் - படுமோசமான சாதனை

Sumathi
in கிரிக்கெட்Report this article
கீப்பர் செய்த மோசமான சாதனை வேடிக்கையாக பேசப்பட்டு வருகிறது.
கிளைவ் மடான்டே
டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் ஜிம்பாப்வே அணியை விட அயர்லாந்து அணி 40 ரன்கள் அதிகமாக சேர்த்தது.
ஜிம்பாப்வே அணியில் அறிமுகமான விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே 42 ரன்களை பை (Bye) ரன்களாக விட்டுக் கொடுத்திருந்தார். தொடர்ந்து, அறிமுக போட்டியில் கிளைவ் மடான்டே இந்த மோசமான நிகழ்வுகளால் கலங்கினார்.
படுமோசமான சாதனை
இதுவே கிரிக்கெட் உலகின் படுமோசமான விக்கெட் கீப்பிங் சாதனையாகவும் அமைந்துள்ளது. அயர்லாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜிம்பாப்வே அணியின் பவுலர்கள் நிறைய பந்துகளை லெக் திசையில் வீசினர்.
விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே-வால் பல பந்துகளை பிடிக்க முடியாமல் போனது.
டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக பை ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது இந்த போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.