இந்திய அணி வீரர்கள் தேர்வில் அரசியல் நடக்கிறதா? முதல் முறையாக பேசிய நடராஜன்
இந்திய அணியில் மீண்டும் எப்போது நடராஜன் இடம் பெறுவார் என தமிழக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
நடராஜன்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் 2020 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்து போது ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடியது. அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதே வேகத்தில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் முக்கிய வீரராக மாறினார். காயம் காரணமாக அணியில் இருந்து விளக்கப்பட்டவர், கடைசியாக இந்திய அணிக்காக விளையாடி 3 ஆண்டுகள் கிட்ட ஆகிவிட்டது.
அரசியலா?
அவருக்கு அணியில் இடம் வழங்கப்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தல்கள் இருந்து வருகிறது. அணிக்கு கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்துள்ளதால் அவர், நடராஜனை அணியில் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பலரும் வீரர்கள் தேர்வில் அரசியல் வந்துவிட்டது கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக பேசிய நடராஜன், கிரிக்கெட்டில் அரசியல் நடக்கவில்லை. இந்திய அணியில் நன்றாக வாய்ப்புகள் கிடைக்கின்றன. காயம் காரணமாகவே போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது என்றார்.