ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன்; இப்பொழுதே கற்றுக்கொள்ளுங்கள் - கிரிக்கெட் வீரர் நடராஜன்
இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியுள்ளார்.
நடராஜன்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் 2020 ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி உள்ளார். ஐபிஎல் போட்டியில் தற்போது ஹைதாராபாத் சன்ரைசர் அணிக்காக விளையாடி வருகிறார். சேலத்தில் தான் படித்த கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.
இதில் பேசிய நடராஜன், மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கை உங்களால் அடைய முடியும்.
சேலம்
என்னுடைய சொந்த செலவில், சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி எனது கிராமத்தை சுற்றியுள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெற வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் இந்த விளையாட்டு மைதானம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இப்பொழுது TNPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றார்கள் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இன்னும் என் கிராமத்தைச் சார்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எங்கு கிரிக்கெட் விளையாட சென்றாலும் என்னுடைய சொந்த செலவில் அவர்களை அனுப்பி வைப்பேன்.
ஹிந்தி
பஞ்சாப் அணிக்கு முதன் முதலில் நான் செல்லும்போது ஹிந்தி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அங்கு தனிமையை உணர்ந்தேன். எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அங்கு இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளருக்கு தமிழ் தெரிந்ததால் அவர் தமிழில் பேசி எனக்கு உதவினார். அப்போது சேவாக்கும் எனக்கு துணையாக இருந்தார்.
இந்தி தெரியவில்லை என்பதால் நான் சோர்ந்து போகவில்லை. எனவே மாணவர்கள் பள்ளி கல்லூரி பருவத்திலே பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடராஜன் பேசியிருக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் நடராஜனின் பேச்சு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஹிந்தி தெரியவில்லை என்றாலும், ஆங்கிலம் கற்றுக்கொண்டாலே போதும் நடராஜன் சமாளித்திருக்கலாம், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள் என நடராஜனின் பேச்சுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்