பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

Indian Cricket Team Pakistan national cricket team
By Sumathi Jul 23, 2024 02:30 PM GMT
Report

இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 பிசிசிஐ கோரிக்கை

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியா இந்த தொடரில் விளையாட பாகிஸ்தான் வரப்போவதில்லை என்று அண்மையில் அறிவித்தது.

ind vs pak

மேலும், இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால் ஹைபிரிட் மாடலில் வேறு ஏதேனும் நாட்டில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்தது.

தோனி பற்றி கனவு இருந்தது; அது உடைஞ்சப்ப மோசமான ஃபீல் - ஷிவம் துபே

தோனி பற்றி கனவு இருந்தது; அது உடைஞ்சப்ப மோசமான ஃபீல் - ஷிவம் துபே

ஐசிசி ஆலோசனை

இந்நிலையில், ஐசிசியின் ஆலோசனைக் கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான 384 கோடி ரூபாய் வேண்டும் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி! | Icc Not Considering Bcci Hybrid Model Match

இதனை ஐசிசி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு அதற்கான நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதன்மூலம், இந்திய அணி கண்டிப்பாக பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் இந்த தொடரில் இருந்து இந்தியா புறக்கணித்து விடும் வாய்ப்பும் உள்ளது.

அவ்வாறு நடந்தால் இந்தியாவுக்கு பதிலாக இலங்கை அல்லது வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் இந்த தொடரில் மாற்று அணியாக பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.