இந்தியா இல்லனா கிரிக்கெட் ஒன்னும் அழிந்துவிடாது - கடுப்பான பாகிஸ்தான் வீரர்!!

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team Pakistan national cricket team
By Karthick Jul 23, 2024 05:51 AM GMT
Report

நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி அதிகப்படியான எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி

1998-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என 2017-ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது சாம்பியன்ஸ் டிராபி. உலககோப்பைக்கு நிகராக கருதப்படும் இந்த கோப்பையை 2013-ஆம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி வென்று இருந்தது.

Champions Trophy 2025

அதனை தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வரை தொடர் அத்துடன் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இத்தொடர் நடைபெறுகிறது. போட்டி பாகிஸ்தான் நடைபெறுவதால் இந்திய அணி இத்தொடரில் பங்கேற்குமா என்ற கேள்விகள் எழுந்து கொண்டே வருகிறது.

விஷயம் தெரியாம கம்பீரை பேசிட்டோம் - அணியில் இடம் கிடைக்காதற்கு கெய்க்வாடே காரணம்!!

விஷயம் தெரியாம கம்பீரை பேசிட்டோம் - அணியில் இடம் கிடைக்காதற்கு கெய்க்வாடே காரணம்!!

அதற்கான காரியம் சொல்லி தெரியவேண்டியதில்லை. பாகிஸ்தான் செல்ல, இந்திய அணியும் வெளிப்படையாகவே மறுத்துவிட்டது. இதன் காரணமாக பொதுவான ஒரு இடத்தில் இந்திய அணிக்கான போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.

India and Pakistan Champions Trophy 2025

அதில், இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்த சலசலப்புகள் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாசன் அலி கடுமையாகவே பதிலைத்துள்ளார்.

அழியாது 

அவர் பேசும் போது, 2023 ODI உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானின் இந்திய வருகையை கருத்தில் கொண்டு, ICC போட்டியானது, எந்தவித அரசியல் இடர்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புவதாக கூறினார்.

Hasan ali Pakistan

தொடர்ந்து பேசியவர், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் முன்பு கூறியது போல், சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தானில் தான் நடைபெறும் என உறுதிபட தெரிவித்து, இந்தியா வர விரும்பவில்லை என்றால், தொடர் அவர்கள் இல்லாமல் விளையாடப்படும் என்றும் இந்தியா பங்கேற்கவில்லை என்பதற்காக, கிரிக்கெட் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்றும் காட்டமாக பேசினார்.