அரசு மருத்துவமனை; வைத்தியம் பார்த்த தூய்மை பணியாளர் - என்ன விளையாட்டு? தினகரன் சாடல்!

Government of Tamil Nadu Madurai TTV Dhinakaran
By Swetha Apr 29, 2024 11:00 AM GMT
Report

தூய்மை பணியாளர் ஒருவர் நோயாளிக்கு வைத்தியம் செய்த சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனை

மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் உடல்நலக்குறைவு காரணமாக வந்த நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஒருவர் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனை; வைத்தியம் பார்த்த தூய்மை பணியாளர் - என்ன விளையாட்டு? தினகரன் சாடல்! | Cleaning Worker Did Treatment To Patient

அந்த வகையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாத காரணத்தினால் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தொடர்ந்து, நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் தங்களின் சிகிச்சைக்காக வரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில், மருத்துவப் பணிக்கு எவ்வித சம்மந்தமுமில்லாத தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது நோயாளிகளின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும் என்றார்.

சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையை 2 நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் அவலம்

சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையை 2 நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் அவலம்

தினகரன் சாடல்

மேலும், மன்னார்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என எழுந்த அடுக்கடுக்கான புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததே சுகாதாரத்துறையில் இதுபோன்ற தொடர் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என கூறினார்.

அரசு மருத்துவமனை; வைத்தியம் பார்த்த தூய்மை பணியாளர் - என்ன விளையாட்டு? தினகரன் சாடல்! | Cleaning Worker Did Treatment To Patient

எனவே, இனியாவது அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்க தேவையான

அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் மனித உயிர்கள் மீதான அலட்சியம் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.தற்போது தூய்மை பணியாளர் நோயாளிக்கு வைத்தியம் பார்த்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.