பூனைக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு விழா - ஊரையே அசரவைத்த மாணவி!

Tamil nadu Viral Photos Dindigul
By Vidhya Senthil Sep 23, 2024 11:07 AM GMT
Report

 செல்லப் பிராணியான பூனைக்கு 11-ஆம் வகுப்பு மாணவி நடத்திய வளைகாப்பு விழா உறவினர்கள் பங்கேற்று ஆசிர்வதித்தனர்.

 செல்லப் பிராணி

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்த்தவர்கள் கமலா- சின்னச்சாமி தம்பதியினர்.இவர்களுக்கு லட்சுமி பிரியதர்ஷினி என்ற மகளுள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டில் புஷி என்ற பூனையை சுமார் 1 1/2 ஆண்டு காலமாக செல்லமாக வளர்த்து வருகின்றனர்.

dindukal

இந்த பூனையானது தற்பொழுது கருவுற்று உள்ளது . இந்த பூனைக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என மகள் லட்சுமி பிரியதர்ஷினி முடிவு செய்துள்ளார்.இதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

viral video : கா..கா.. என்று கத்திய நபர்... - ஒரு நொடியில் பறந்து வந்த காக்கா கூட்டம்..!

viral video : கா..கா.. என்று கத்திய நபர்... - ஒரு நொடியில் பறந்து வந்த காக்கா கூட்டம்..!

அதன்படி ,இன்று நடைபெற்ற பூனை புஷிக்கு வளைகாப்பு விழாவில் ஒரு பெண் தாயுற்று வளைகாப்பு விழா நடத்தப்படுவது போல் ஒற்றை வரிசையில் சீர்வரிசைகள் செய்து பூனைக்கு புது ஆடை அணிந்து, வளையல் அணிவித்து, சந்தன குங்குமம் நெற்றியிலிட்டு,

 வளைகாப்பு

பூ தூவி செல்ல பிராணியான பூனைக்குட்டிக்கு சாக்லேட் போன்ற உணவுகள் கொடுக்கப்பட்டது வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து 11 ஆம் வகுப்பு மாணவி லட்சுமி பிரியங்கா கூறுகையில்,செல்லப்பிராணியானது நம்மைச் சந்தோஷமாகவும் ஆபத்தான காலங்களில் நம்மை காப்பாற்றவும் செய்கிறது .

 baby shower

நாம் அதையெல்லாம் மறந்துவிட்டு நம்மைச் சந்தோஷப்படுத்தக் கூடிய செல்லப்பிராணிகளைக் கண்டுகொள்ளப்படுவது இல்லை. நம்மைச் சந்தோஷப்படுத்தக்கூடிய இந்த பிராணிகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அவைகளையும் சந்தோஷப்படுத்த வேண்டும்.

மேலும் நம்மாளோடா ஒருவராக இருந்து  வரும் செல்லப்பிராணியை சந்தோஷப்படுத்தக்கூடிய ஜீவனைப் பாதுகாத்திட வேண்டும் என்று கூறினார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.