வெறும் ரூ.15; அதிரடி ஆஃபர் அறிவித்த ஷாப்பிங் மால் - சல்லிசல்லியாக நொறுக்கிய மக்கள்!
வணிக வளாகத்தையே பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி ஆஃபர்
பாகிஸ்தான், கராச்சியில் டிரீம் பஜார் என்ற பெயரில் மெகா மால் ஒன்று திறக்கப்பட்டது. இந்த பஜாரை வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர் ஒருவர் மிகுந்த செலவு செய்து கட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்க ஏற்பாடு செய்திருந்தார்.
அதனையொட்டி பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதல் நாள் என்பதால் அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாஸ்கோவில் மிகப் பெரிய ஷாப்பிங் சென்டரில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்....!
சூறையாடிய பொதுமக்கள்
இந்நிலையில், வணிக வளாகத்திற்கு முன் சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்து விட்டனர். அனைவரும் ஒட்டுமொத்தமாக வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். பாதுகாவலர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயன்றும் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
உள்ளே சென்றவர்கள் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆக ஆரம்பித்தனர். அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் சம்பவ இடத்திற்கு வந்ததும் கூட்டம் ஒட்டுமொத்தமாக கலைந்து சென்றது.
அரை மணி நேரத்தில் ஒரு பெரிய வணிக வளாகத்தையே பொதுமக்கள் சூறையாடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.