மாஸ்கோவில் மிகப் பெரிய ஷாப்பிங் சென்டரில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்....!

United Russia Viral Video Fire Accident
By Nandhini Dec 09, 2022 06:40 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

மாஸ்கோவில் ஷாப்பிங் சென்டர் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோவில் ஷாப்பிங் சென்டர் பயங்கர தீ விபத்து

ரஷ்யாவின் மாஸ்கோ உள்ள லெனின்கிராட் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள "மெகா கிம்கி" என்ற மிகப் பெரிய ஷாப்பிங் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், இந்த ஷாப்பிங் சென்டரில் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டது. இதனையடுத்து பற்றி எரிந்த தீ கூரையில் மளமளவென பரவி பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது என்றனர்.

இந்த தீ விபத்து சுமார் 150 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. OBI ஸ்டோர் கட்டிடம் முழுவதும் இந்த தீ விபத்தில் அழிந்துள்ளது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

fire-mega-khimki-shopping-mall-moscow