முதல் ஆளாக விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித் ;வெங்கட் பிரபு ட்விட் - இதை கவனிச்சிங்களா!

Vijay GOAT Tamil Actors
By Vidhya Senthil Sep 05, 2024 04:43 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

   ‘தி கோட்’ படம் வெற்றியடைய நடிகர் விஜய்க்கு அஜித் வாழ்த்து சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது .‘தி கோட்’இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது .

முதல் ஆளாக விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித் ;வெங்கட் பிரபு ட்விட் - இதை கவனிச்சிங்களா! | Cinema Actor Ajith Wishes Goat Movie Release

மேலும் இரவிலிருந்தே விஜயின் ரசிகர்கள் தியேட்டர்களின் வாசல்களில் குவிந்து ஆரவாரமாக மேள, தாளம் முழங்கத் திரைப்படத்தை  பார்க்க உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தில் இணையணுமா..? அடுத்த வாரம் வருகிறது செயலி..!

தமிழக வெற்றி கழகத்தில் இணையணுமா..? அடுத்த வாரம் வருகிறது செயலி..!

வரும் செப்.7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் அதையொட்டி ‘தி கோட்’ வெளியாகிறது.இந்த நிலையில் ‘தி கோட்’ படம் வெற்றியடைய நடிகர் விஜய்க்கு அஜித் வாழ்த்து சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு

இது குறித்து வெங்கட் பிரபு தனது எக்ஸ் திவில், “ மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின்போது அஜித், விஜய் உடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு எனது அண்ணன் அஜித் தான் ‘தி கோட்’ படம் வெற்றியடைய விஜய் மற்றும் எங்கள் குழுவை வாழ்த்திய முதல் நபர். அதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.