உறுப்பினர் சேர்க்கை நடக்கிறதா..? த.வெ.க சேர்க்கை படிவம்..? உண்மையானதா..?

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthick Feb 23, 2024 09:15 AM GMT
Report

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதற்கான விண்ணப்ப படிவம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விண்ணப்பபடிவம்

2 கோடி பேரை இலக்காக கொண்டு கட்சி நிர்வாகிகளை பணியாற்றும் படி, த.வெ.க'த்தின் தலைமை அறிவுறுத்தியுள்ள நிலையில், அது குறித்தான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

த.வெ.க'வின் முதல் மாநாடு எங்கு - எப்போது..? தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்..?

த.வெ.க'வின் முதல் மாநாடு எங்கு - எப்போது..? தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்..?

இன்னும் அதிகாரபூர்வமாக கட்சி சார்பில் ஆட்கள் சேர்க்கும் பணி துவங்காத நிலையில், இணையத்தில் வெளியான படிவம் ஒன்று பெரும் வைரலாகி இருக்கின்றது. ஆனால், அது போலியான படிவம் என்றும் அது உண்மையானது அல்ல என்று கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

tamilaga-vettri-kazhagam-fake-application

விஜய் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முழுக்க முழுக்க செயலி மூலம் தான் நடைபெறும் என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகம், உறுப்பினர் சேர்க்கை படிவம் என்பது பொய்யானது என்பதையும் தெரிவித்துள்ளது.