த.வெ.க'வின் முதல் மாநாடு எங்கு - எப்போது..? தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்..?

Vijay Tamil nadu Madurai Thamizhaga Vetri Kazhagam
By Karthick Feb 23, 2024 04:27 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு எந்த நகரில் நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

நிர்வாகிகள் கட்சியில் ஆட்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இருந்து வரும் சூழலில், தலைவர் விஜய் கட்சியின் அடுத்தகட்ட திட்டங்களை தீட்டி வருகின்றார்.

vijay-to-have-first-political-meeting-in-madurai

கட்சி துவங்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் கட்சியின் சின்னம், கொடி போன்றவை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கட்சியின் மாநாடு நடைபெறும் போது இது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

நியாயமான விமர்சனங்களை ஏற்கணும் - தமிழக வெற்றி கழகம் பெயர் திருத்தப்படுகிறதா..?

நியாயமான விமர்சனங்களை ஏற்கணும் - தமிழக வெற்றி கழகம் பெயர் திருத்தப்படுகிறதா..?

இந்நிலையில், தான் மாநாடு எந்நகரில் நடைபெறும் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

முதல் மாநாட்டை..

அதாவது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் கட்சியின் முதல் மாநாட்டை தமிழக வெற்றிக் கழகத்தினர் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில், இந்த மாநாட்டை நடத்தவுள்ளதாகவும்.

vijay-to-have-first-political-meeting-in-madurai

கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி, அதற்கான நிர்வாகிகளை நியமித்து பின்னர் கட்சி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.