Friday, May 9, 2025

நியாயமான விமர்சனங்களை ஏற்கணும் - தமிழக வெற்றி கழகம் பெயர் திருத்தப்படுகிறதா..?

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthick a year ago
Report

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழக வெற்றி கழகம்

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த 2-ஆம் தேதி துவங்கினார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவிய அவர், 2026-இல் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க போவதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

name-change-in-vijay-political-party-to-happen

கட்சி பணியில் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வரும் நிலையில், விஜய் தனது படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கின்றார். இதற்கிடையில், கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதாக பல விமர்சனங்கள் வந்தன.

மற்றுமொரு கட்சியா..? அல்லது மாற்று கட்சியா..? தமிழக வெற்றி கழகம் என்ன செய்யும்..!

மற்றுமொரு கட்சியா..? அல்லது மாற்று கட்சியா..? தமிழக வெற்றி கழகம் என்ன செய்யும்..!

அதாவது தமிழக வெற்றி கழகம் என்பதில் வெற்றிக் கழகம் என வரவேண்டும் என பலரும் கருத்துக்களை அடுத்தடுத்து வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தற்போது கட்சியின் பெயர் மாற்றப்படுவதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளிவந்துள்ளது.

name-change-in-vijay-political-party-to-happen

நியாயமான விமர்சனங்களை ஏற்பது தான் தலைமைக்கு அழகு என விஜய் கட்சி நிர்வாகிகளிடத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.