மற்றுமொரு கட்சியா..? அல்லது மாற்று கட்சியா..? தமிழக வெற்றி கழகம் என்ன செய்யும்..!

Vijay Tamil nadu
By Karthick Feb 03, 2024 02:03 PM GMT
Report

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவியுள்ள விஜய், தனது இலக்கை 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் வைத்துள்ள நிலையில், எந்த மாதிரியான தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று இந்த கட்டுரையில் காணலாம்.

விஜய் - அரசியல் 

நடிகராக உச்சம் தொட்டுள்ள விஜய், தனது சினிமா வாழ்க்கையின் உச்சியில் இருக்கும் நேரத்தில், தற்போது அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் விஜய் எந்த மாதிரியான தாக்கத்தை உண்டாக்குவார் என்ற கேள்விகள் பெருமளவில் எழுந்துள்ளது.

 what-will-vijay-thamizhaga-vetri-kazhagam-will-do

சூப்பர்ஸ்டார் நடிகராக இருக்கும் போதே தனி அரசியல் கட்சியை நிறுவுபவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜய். இதில், சிவாஜி கணேசன் மாறுபட்டு நிற்கிறார் ஏன்என்றால் எம்.ஜி.ஆரை போல சிவாஜிக்கு அரசியல் பின்புலம் பெரிதாக இல்லை என்று தான் கூறவேண்டும்.

ஏன் நடிக்கமாட்டாரு..! சினிமாவிலிருந்து விலகும் விஜய் - கெஞ்சும் பிஞ்சு குழந்தை..! வைரல் வீடியோ..!

ஏன் நடிக்கமாட்டாரு..! சினிமாவிலிருந்து விலகும் விஜய் - கெஞ்சும் பிஞ்சு குழந்தை..! வைரல் வீடியோ..!

விஜய் எவ்வகையான தாக்கத்தை உண்டாக்குவார் என பார்ப்பதற்கு முன்பு, தமிழக அரசியல் களம் குறித்து சற்று காணலாம்.

தமிழ்நாடு அரசியல் களம்

ஆளும் திமுக தொடர்ந்து தனது வாக்குவங்கியை பெருமளவில் தன் பக்கமே வைத்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக முந்தைய தேர்தல்களில் சற்று சறுக்கினாலும், வாக்கு சதவீதத்தில் இருகட்சிக்குமே பெரிய வித்தியாசமில்லை.

what-will-vijay-thamizhaga-vetri-kazhagam-will-do

இந்த வித்தியாசத்தில் தற்போது வளரும் கட்சியாக தமிழ்நாட்டில் உள்ளது நாம் தமிழர். அதே நேரத்தில், தனித்து நிற்கும் தற்போதைய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், வாக்குகளை அவர் மட்டுமே கவுறுகிறாரா..? என்ற கேள்வி எளிதில் எழுகிறது.

மற்ற கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், விசிக போன்றவை கூட்டணி கட்சிகளாகவே நீடிக்கின்றன. வெற்றிடம் கட்சியில் இல்லை என்றாலும், தமிழ்நாட்டை ஆண்ட பெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை சில இடங்களில் தமிழ்நாடு இழந்து தவிக்கிறது என்று கூறுவது நிதர்சனமே.

சித்தாந்தம்..!

இந்த இடத்தில் விஜய் நிரப்புவாரா..? என்ற கேள்வியை முதலில் எழுப்புவதே தவறு. அந்த இருபெரும் தலைவர்களும் பெரும் கோட்பாடுகளையும், கட்சி சித்தாந்தங்களையும் கொண்டு அரும்பாடுபட்டு கட்சியை வளர்த்து, பணியாற்றி மக்களிடம் வாக்குகளை பெற்றனர்.

அதனை நோக்கி விஜய் பயணிக்க இன்னும் நீண்ட காலம், தூரமுள்ளது. கட்சியை அறிவித்து விட்டாலும், நிகழ்ச்சி ஒன்றில் விஜய் குறிப்பிட்டார் காமராஜர், பெரியார், அம்பேத்காரை படியுங்கள் என்று அவர்களை போல தெளிவான ஆழமான சித்தாந்த ரீதியிலான கொள்கையை அவருடைய தமிழக வெற்றி கழகம் எடுத்து வைக்க வேண்டும்

what-will-vijay-thamizhaga-vetri-kazhagam-will-do

அதில் என்ன முடிவெடுக்கிறார் என்பது வரும் காலங்களில் தான் வெளிப்படும். இன்றைய இளம் ரசிகர்கள் கொடி பிடிக்கவும், ஒரு சில லட்ச வாக்குகளாக மாற வாய்ப்புகள் இருந்தாலும், ஆட்சி என்ற குறிக்கோளை வைத்துள்ள விஜய்க்கு அவரது ரசிகர்கள் மட்டுமே போதாது.

பொதுமக்களையும் விஜய் சென்றடைய அவருக்கு சித்தாந்த ரீதியிலான, அடிப்படை கொள்கை இருக்க வேண்டும். தமிழ்நாடு என்பதால் அது மொழி, மாநில சுயாட்சி போன்றவற்றையும் கொண்டிருத்தல் அவசியமே.

தளபதி அல்ல தளபதிகள் வேண்டும்

எம்.ஜி.ஆர் தனி கட்சி துவங்கிய போது, திமுக பல முக்கிய தலைவர்களும் அவரை பின்தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர். அதுவே அவரின் உடனடி வெற்றிக்கு காரணம் என்றும் கூறலாம். மக்கள் இங்கு ஒரு முகத்திற்கு வாக்களிக்கிறார்கள் என்றாலும், தனி இரண்டாம் கட்ட தலைவர்களும் திராவிட கட்சிகளில் நிறைந்திருப்பது போல, தமிழக வெற்றி கழகத்திற்கும் அவசியம்.

what-will-vijay-thamizhaga-vetri-kazhagam-will-do

விஜயகாந்த் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலத்தில் பழம்பெரும் அரசியல்வாதியான பண்ருட்டி எஸ் ராமச்சந்திரன் அவருக்கு உதவி செய்தார். ஆனால், விஜய்க்கு அவ்வாறு இல்லை, குறைந்தபட்சம் தற்போதைக்கு இல்லை.

புஸ்ஸி ஆனந்தை கை கட்டி அவர் 2006-ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ'வாக இருந்தவர் தானே என்றால், அதன் பிறகு ஏன் அவரது அரசியல் பணி தொடரவில்லை என்ற கேள்வி உள்ளதல்லவா..?

what-will-vijay-thamizhaga-vetri-kazhagam-will-do

மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் எம்.எல்.ஏ'வான புஸ்ஸி ஆனந்த் மட்டுமே விஜய் போதாது என்பதும் நிதர்சனமே.அதற்கான பணிகளிலும் விஜய் ஈடுபட்டுள்ளார் என்று தான் தெரிகிறது. தமிழ்நாட்டை ஐபிஎஸ் அதிகாரி எம்.ரவி, சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழக டி.ஜி.பி சி.சைலேந்திர பாபு, மதுரை சுரங்க முறைகேடுகள் உட்பட பல சமயங்களில் மாநில அரசுடன் முரண்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி யு.சகாயம் ஆகியோரை விஜய் சந்தித்திருந்தார். அவர்களுடன் அவர் அரசியலும் பேசியிருக்கலாம்.

what-will-vijay-thamizhaga-vetri-kazhagam-will-do

அப்படி நேர்மையான அதிகாரிகள், அரசியல் வல்லுநர்கள் போன்றவர்களிடம் அறிவுரைகளை பெற்று சரியாக கையாளும் பட்சத்தில் விஜய் அரசியலில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பலாம். மக்களை கவர்ந்தவர், அடுத்த எம்.ஜி.ஆர், எப்போதும் "ஜெ" போடுபவர்களை புரந்தள்ளி, சிறப்பான அறிவுசார் எண்ணங்களை கொண்டவர்களை விஜய் தன் அருகில் சேர்த்து கொண்டு பணியாற்றினால், யாருக்கு தெரியும் தமிழக வெற்றி கழகத்திற்கு விஜயம் உண்டாகலாம்.

ஆனால் 2026..?