தமிழக வெற்றி கழகத்தில் இணையணுமா..? அடுத்த வாரம் வருகிறது செயலி..!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthick Mar 04, 2024 02:08 AM GMT
Report

நடிகர் விஜய்யின் வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து உற்றுநோக்கப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றி கழகம்

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த 2-ஆம் தேதி துவங்கினார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவிய அவர், 2026-இல் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க போவதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

app-launch-of-tamizhaga-vetri-kazhagam-next-weeki

தொடர்ந்து பல்வேறு பணிகளில் அவரது கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், உறுப்பினர் சேர்க்கை குறித்து பல்வேறு செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இன்று கூடும் முதல் தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம்..! எதிர்பார்க்கப்படும் முக்கிய முடிவுகள்..!

இன்று கூடும் முதல் தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம்..! எதிர்பார்க்கப்படும் முக்கிய முடிவுகள்..!

ஆனால், கடந்த வாரம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இது குறித்து அதிகாரபூர்வமாக தலைவரிடம் இருந்து தான் தகவல் வரும் என்று தெரிவித்திருந்தார்.

செயலி..

இந்த சூழலில், தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்து தகவல் ஒன்று மீண்டும் வெளிவந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அடுத்த வாரம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

app-launch-of-tamizhaga-vetri-kazhagam-next-weeki

வரும் மே மாதத்திற்குள் உறுப்பினர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.