இன்று கூடும் முதல் தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம்..! எதிர்பார்க்கப்படும் முக்கிய முடிவுகள்..!

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthick Feb 07, 2024 02:37 AM GMT
Report

அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக வெற்றி கழகம்

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ள நடிகர் விஜய் அரசியலில் வேகம் காட்ட துவங்கியுள்ளார்.

first-meeting-of-tamilaga-vetri-kazhagam-today

தமிழக வெற்றி கழகம் அறிவிப்பு வெளியானது முதல், கட்சி பணிகள் ஆங்காங்கே நடைபெற துவங்கிவிட்டன. தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவிருக்கிறது.

கட்சி ஆரம்பிச்சு 2 நாள் தான் ஆச்சு..! போலீசாரின் விசாரணையில் விஜய்யின் த.வெ.கழகத்தினர்...?

கட்சி ஆரம்பிச்சு 2 நாள் தான் ஆச்சு..! போலீசாரின் விசாரணையில் விஜய்யின் த.வெ.கழகத்தினர்...?

கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

first-meeting-of-tamilaga-vetri-kazhagam-today

ஆனால் இந்த கூட்டத்தில் தலைவர் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளி வந்துள்னன. சென்னையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் 2026 -ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலே இலக்கு என பயணிக்கும் தமிழக வெற்றி கழகம், அதற்கான முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்ட துவங்கிவிட்டது.