கட்சி ஆரம்பிச்சு 2 நாள் தான் ஆச்சு..! போலீசாரின் விசாரணையில் விஜய்யின் த.வெ.கழகத்தினர்...?
முறையான அனுமதி பெறாத தமிழக வெற்றி கழகத்தினரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
விஜய் கட்சி
2-ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார். தமிழமெங்கும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசியலை தலைவர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழலில் விஜய் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்றெல்லாம் கேள்விகள் எழும் நேரத்தில் அசுர பலத்துடன் இருக்கும் திமுக, அதிமுக மத்திய பாஜக அரசை அவர் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் எழுந்துள்ளது.
கொடிக்கம்பம்
இது போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கும் நிலையில், நேரடியாக களத்திலும் தமிழக வெற்றி கழகத்தினர் இறங்கியுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் விருகை பகுதி பொறுப்பாளரான வேல்முருகன் என்பவர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் 'தமிழக வெற்றி கழகம்' சார்பாக 'விஜய் மக்கள் இயக்கம்' கொடிக்கம்பத்தை வைத்துள்ளார்.

மாநகராட்சி மற்றும் காவல்துறையினரிடம் முறையான அனுமதியது பெறாமலே, இந்த கொடிக்கம்பத்தை அவர்கள் வைத்துள்ளதால், காவல் துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
24 வயதில் பான் இந்தியா ஸ்டார்! மருத்துவர் பட்டம் பெற்ற நடிகை ஸ்ரீலீலா.. குவியும் வாழ்த்துக்கள் Manithan
பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள் IBC Tamil