நடித்த 22 படங்களுமே தோல்வி.. ஜூஸ் நிறுவனத்தை தொடங்கி சாதனை - பிரபல நடிகர் யார் தெரியுமா?
சினிமாவில் தோல்வி அடைந்த பிரபல நடிகர் தொழிலதிபராகி சாதனை படைத்தது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல நடிகர்
பாலிவுட்டில் 1999 ஆம் ஆண்டு டினோ மோரியா பியார் மே கபி கபி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படம் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு 2002 இல் 'ராஸ்' என்ற த்ரில்லர் மூலம் டினோ மோரியா கம்பேக் கொடுத்தார். இந்த படம் நல்ல புகழைப் பெற்றுத் தந்தது.
₹5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 37 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, சஞ்சய் தத் மற்றும் இம்ரான் ஹாஷ்மி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருந்தாலும், டினோ மோரியாவின் 22 படங்கள் தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இதனையடுத்து ராஜீவ் மேனன்இயக்கத்தில் தமிழில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் அவர் நினைத்தது போல் அமையவில்லை.தொடர்ந்து இந்தி , தமிழ் ,கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
சாதனை
அதன் பிறகு படங்களிலிருந்து ஒதுங்கினார். 2012 ஆம் ஆண்டில், அவர் கிரிக்கெட் ஐகான் எம்எஸ் தோனியுடன் இணைந்து கூல் மால் என்ற வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டில், அவர் மிதில் லோதா மற்றும் ராகுல் ஜெயின் ஆகியோருடன் இணைந்து தி ஃப்ரெஷ் என்ற ஜூஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
பிராண்ட் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றதால், இந்தியா முழுவதும் 36 கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. தொழிலதிபர் டினோ மோரியா தனது வணிகத் திறமை மற்றும் பல்வேறு முயற்சிகளால் 150 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளது.